மல்லிகைக்கொடி இல்லை
செம்பருத்தி இல்லை
துளசி இல்லை
மாதுளை இல்லை
மா பலா வாழை இல்லை
பூசணிக்கொடி இல்லை
தக்காளி வெண்டை கத்தரிச் செடிகள் இல்லை
ஆடு கோழி மாடு இல்லை
செல்லப்பிராணிகள் வளர்க்க இயலவில்லை
ஆனால்
வசதியான நகரொன்றில்
மேகம் எட்டும் உயரத்தில்
எனக்கொரு வீடு இருக்கிறது.
பெருமான் பெருவேல்