பறவைகள்


நிலம் தேடும் நினைவுகள்
விதைகளென
மனதுக்குள் பதிகின்றன.

மனப்பரப்பில்
விதைகள் முளைத்து
மரங்கள் கிளைத்து
பறவைகள் கூடுகின்றன.

நான்
நிலத்தைத் தேடி
ஓடிக்கொண்டிருக்கிறேன்.

பெருமான் பெருவேல்