எல்லா பணிகளிலும்
தோற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
திறமையை மட்டுமே முன்னிருத்துகிறவன்
ஜால்ரா கூட்டத்தினிடையே
முண்டியடித்து முன்னேறுவது
எளிதல்ல என்பதை
கார்ப்பரேட் உலகை அறிந்தவர்களுக்கு
சொல்லாமலே புரியும்.
முதல் வேலையில் தோற்றேன்
இரண்டாம் வேலையில் தோற்றேன்
வடிவமைப்பாளனாக
பொறியாளனாக
மூத்த பொறியாளனாக
முதன்மை பொறியாளனாக
துணை மேலாளராக
தோற்றேன்.
மேலாளராக
முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.
வேலை தேடி
பட்டினியில் திரிந்தவன்
மேலாளராக முட்டிக்கொண்டிருப்பதற்கிடையே
ஒவ்வொரு தோல்வியும்
ஒவ்வொரு படிகல்லாக
உயர்த்தி விட்டிருப்பதை
சிறு புன்னகையுடன்
நினைத்துப் பார்க்கிறேன்.
சும்மா இருப்பதை விட
தோல்வி உயர்வானது.
பெருமான் பெருவேல்