வயதாக வயதாக
தமிழின் மீது
தீராக்காதல் பிறக்கிறது.
மொழி
உணர்வுகளை வெளிப்படுத்தும்
ஓர் சொற் கூட்டமே
என்றாலும்
தமிழ் தாய் தந்தை மொழி
என்றாலும்
வாழ்வின் பெரும்பகுதி
பிறமொழிகளைப்
பயன்படுத்த நேர்ந்தாலும்
அவற்றைக்கடந்து
தமிழ் மீது
தீராக்காதல் பிறக்கிறது
மனதை அகழ்கிறது.
பெருமான் பெருவேல்