வெல்லும் திசை நோக்கி


போதும்
ஓடிய பொழுதுகள் போதும்
சேர்த்தவை போதும்
இருப்பதுடன்
நிம்மதியாக இருந்துவிடலாம்
என அடிக்கடி
தோன்றவே செய்கின்றன.

நின்றுவிட்டால்
சிறுகச்சிறுக சேர்த்தவை
கரையத் தொடங்கும்.

சேர்த்தவை கரைந்துவிட்டால்
யாரிடமேனும் கையேந்தும் நிலை
வந்து சேரும்.

கையேந்தும் அவலத்தைவிட
வலிகள் மிகுந்தாலும்
ஓடுவதே மேல் என்று
மேலும் மேலும்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

பெருமான் பெருவேல்