வாழ்வு


ஒரு ஆசை
நிறைவேறியதும்
வேறொரு ஆசை பிறக்கிறது.
அதையும்
கை கொண்டதும்
மற்றொரு ஆசை பிறக்கிறது.

ஆசையும் கனவும்
முடிவற்று நீள்கிறது
அதுவே வாழ்வாகிறது.

பெருமான் பெருவேல்