தமிழன்


தடம் தேடி
தமிழாற்றில்
தமிழள்ளிப் பருகினான்

தரம் நாடி
தன்மை தழைத்து
தன்னிலை உணர்ந்தான்

தடம் தோள் உயர்த்தி
தடைகளைத்
தகர்த்தான்

தரணியிலே
தன்னிகரில்லா
தமிழன் என
தடம் பதித்தான்.

பெருமான் பெருவேல்