வருமானம் தரும் வேலை இல்லை
இனி இம்மாநகரில்
குடியிருக்க இயலாது
சமாளிக்க முடியாது
கவனித்துக்கொள்ளவோ
அரவணைக்கவோ எவருமில்லை
எனத் தோன்றும் போது
பிறந்த ஊர் நோக்கி
அறிந்த சாதி சனங்களும்
உறவினர்களும்
இருக்கும் இடம் நோக்கி
வயோதிக வயதில் செல்வதை
பலராலும்
தவிர்க்க இயலுவதில்லை.
பெருமான் பெருவேல்