உயிர்க்கணம்


நடைவழியில்
ஒரு
பட்டாம்பூச்சி
இறந்து கிடந்தது.

மிதித்துவிடாமல்
காலைத் தூக்கி
தாண்டி நடந்தேன்.

உயிரோடு
இருந்திருந்தால்
நின்று
அதன் பறத்தல் அழகை
பார்த்தபடி இருந்திருப்பேன்.

பெருமான் பெருவேல்