வாழ்வென்பது


என் மனம்
தனிமையை விரும்புகிறது

என் உடல்
உறக்கத்தை விரும்புகிறது

என் நினைவு
இனிமையை விரும்புகிறது

என் கனவு
உயர்வினை விரும்புகிறது

என் வயிறு
சம்பாதிக்கச் சொல்கிறது.

பெருமான் பெருவேல்