நல்ல நாள்


ஒரு நல்ல நாள்
எப்போது வருமென்று
காத்திருந்தேன்.

ஒவ்வொரு நாளாக
வருவதும் மறைவதுமாக
வருடங்கள் ஓடின.

எனக்கு மட்டும்
ஏன் நல்ல நாள் வரவில்லை
என விசனப்பட்டு
முனிவர் ஒருவரிடம் சென்றேன்.

ஐயா முனிவரே
எனக்கு மட்டும்
நல்ல நாள் வருவதேயில்லை
அதன் காரணம் என்ன
என அறிந்து கூறுங்கள் என்றேன்.

மூன்று வேளையும் சாப்பிடுகிறாயா? என்றார்
நன்றாக சாப்பிடுகிறேன்
சாப்பிடாமல் எப்படி ஐயா இருப்பேன் என்றேன்.

உனக்கு உணவு கிடைக்கிற
எல்லா நாளுமே நல்ல நாள் தான் என்றார்.

பெருமான் பெருவேல்