கடலளவு நினைவுகள்


அமைதியைத்
தேடும் காலம்
உள்ளத்தில்
மலர்ந்தபடி இருக்கிறது.

இந்த
நரைகூடிய பருவத்தின்
அமைதிக்குள்
கடலளவு நினைவுகள்
அலையாகி
ஆவியாகி
மேகமாகி
மழையாகப் பொழிகின்றன.

பெருமான் பெருவேல்