வளம்


வளத்துடன் வாழ
படித்துத் தேர்ந்தான்

வளத்துடன் வாழ
வேலை செய்தான்

வளத்துடன் வாழ
வீடு வாங்கினான்

வளத்துடன் வாழ
பொருள் சேர்த்தான்

வளத்துடன் வாழ்கிறாயா
என கேட்டுக்கொண்டான்

அடுத்தவர்களிடம்
கையேந்தாமல்
வாழ்கிற வாழ்வே
வளம் என்றான்.

பெருமான் பெருவேல்