பயணம்


வேடிக்கைப் பார்த்தபடி
வெவ்வேறு இடங்களுக்கு
நாடோடியைப் போல
பயணித்துக்கொண்டே இருந்தேன்.

பயணித்துக்கொண்டே இருப்பதல்ல
நிற்க வேண்டிய
இடம் அறிந்து
இறங்கி ஓரிடத்தில் நிலைப்பதுவே
பயணம் என்று
பிறகு புரிந்துகொண்டேன்.

பெருமான் பெருவேல்