ஆட்டம்


அவனும் மற்றவனும்
சண்டை போட்டபடி இருந்தார்கள்.

அவன் தானே வென்றதாக
கருதினான்.

மற்றவன் தானே வென்றதாக
நினைத்தான்.

இவர்களது சண்டையை
வேடிக்கைப் பார்த்தவன்
உள்ளூர நகைத்தபடி
எதுவும் கூறாமல்
கடந்து சென்றான்.

பெருமான் பெருவேல்