வழிகள் தேடும் வாழ்வு


துன்பம் யாருக்குத்தான் இல்லை
வலியையும் துயரத்தையும்
உணராத மனம் எவருக்கேனும் இருக்கிறதா?

சோறு கவலை
வீட்டு கவலை
பண கவலை
கல்வி கவலை
காதல் கவலை
வேலை கவலை
தொழில் கவலை
நோய் கவலை
உறவு கவலை
இறப்பு கவலை

என பொழுதுக்கும்
ஏதேனுமொரு கவலை
எல்லோரது மனதிலும் சூழவே செய்கிறது.
என்றாலும்,
இந்த வாழ்வு அதன் போக்கில்
போகத்தான் செய்கிறது.

பெருமான் பெருவேல்