தேர்தல் கவிதை


களம் தயாராக உள்ளது
கவலைப்படாதே
அடுத்த போரில்
வென்றுவிடுவோம்
என்றார் தலைவர்.

உங்களுக்கென்ன
சொல்லிட்டு போயிடுவீங்க
ஒவ்வொரு தேர்தலிலும்
தோற்று அடிவாங்கி
மனசு வலிப்பது
எங்களுக்குத் தானே
என்றான் தொண்டன்.

பெருமான் பெருவேல்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *