அறிவுக்கும் காதலுக்கும்
சம்பந்தம் இருப்பதில்லை.
சரி தவறு என்பவை
காதலுக்குத் தெரிவதில்லை.
காதலையும் கடவுளையும்
எளிதில்
புரிந்துகொள்ள முடிவதில்லை.
காதலும் பித்தும்
அகத்திற்குள்
அடங்குவதில்லை.
காதல் என்பது
பகுத்தறிவிற்கு அப்பால் பறக்கும்
மனக்குருவி.
பெருமான் பெருவேல்