எந்தக் கடவுள்களாலும்
காப்பாற்ற இயலவில்லை.
போர் நிலமெங்கும்
உயிர்களின் வலியும் ஓலமும்
திசையெங்கும் பரவி
கேட்பாறின்றி சிதைகின்றன.
பிரார்த்தனைகள் எல்லாமே
மூர்க்கத்தனங்களுக்கு முன்பு
மண்டியிட்டு மடிகின்றன.
அப்படி என்னதான் வேண்டும்?
அத்தனை கடவுளர்களும் என்னதான் செய்கிறார்கள்?
என்னதான் வேண்டும் கடவுளர்களுக்கு?
பெருமான் பெருவேல்