என்னிடம் எதுவும் இல்லை


உன் உள்ளத்தை
வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு
என்னிடம் எதுவும் இல்லை.

உன் ஆகப்பெரிய கனவுகளை
நிறைவேற்றும் அளவிற்கு
என்னிடம் எதுவும் இல்லை.

உன் எல்லா எதிர்பார்ப்புகளையும்
பூர்த்தி செய்யும் அளவிற்கு
என்னிடம் எதுவும் இல்லை.

பசித்திருக்கும் வேளையில்
உன் பசியைப் போக்க இயலும்.
ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள்
கூற இயலும்.

பெருமான் பெருவேல்