ஈசன் உடனிருக்கிறான்


ஒவ்வொரு
பெரிய நகர்வுகளின் போதும்
சமாளிப்பது மிக கடினம்
என்கிற எண்ணத்துடனே
தொடங்குகிறேன்.

எண்ணம் மட்டுமல்ல
யாதர்த்தமும்
அதுவாகவே இருக்கிறது.

என்றாலும்
தொடங்கவேண்டும் என்கிற
உந்துதலில் தொடங்கி
மனம் கசங்கி
கடினங்கள் கடந்து
எண்ணியவை முடிக்கும் போது
ஏற்படும் மகிழ்வும்
முடித்து விடுதலையான நிறைவும்
மனசெல்லாம் பூ வாசமாகிறது.

பெருமான் பெருவேல்